பலதும் பத்தும்

2000 ஆண்டுகள் பழமையான ரோமப் படைவீரர்களின் உணவு கண்டுபிடிப்பு

சுவிட்சர்லாந்தின் Vindonissa என்ற ரோமப் படைத்தளத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கருகிய பாண் (bread) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாண், ரோமப் படைவீரர்கள் எல்லைப் பகுதிகளில் எவ்வாறு உணவு உண்டார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த பாண், Windisch பகுதியில் குடியிருப்பு கட்டுமானத்திற்கு முன் நடந்த அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 10 செ.மீ. அகலம், 3 செ.மீ. தடிமனாக இருந்த இந்த பாண், கருகியதால் அழுகாமல் 2000 ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்துள்ளது.

பாணின் வடிவம், அளவு ஆகியவை, இது தனிப்பட்ட வீட்டில் சமைக்கப்பட்டதல்ல, படைவீரர்களுக்காக பொதுவான அடுப்பில் சமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

மேலும், இந்த அப்பம் உள்ளூர் தானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனால் ரோமப் படைகள், ரோமிலிருந்து மட்டும் பொருட்களை இறக்குமதி செய்யாமல், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தியதை உறுதிப்படுத்துகிறது.

Vindonissa தளம், கி.பி. முதலாம் ஆம் நூற்றாண்டில் ரோமப் படைகளின் முக்கியக் காவல் நிலையமாக இருந்தது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட அப்பம், படைவீரர்களின் அன்றாட வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் அரிய சான்றாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *