நகங்களில் நேரான புடைப்பான கோடுகள் இருக்கிறதா?

நகங்களின் மேலே தடிமனனான கோடுகள் இருந்தால் அதற்கு சில காரணங்கள் உள்ளது. அதை மருத்துவ விளக்கத்துடன் பார்க்கலாம்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி நகங்கள், நாக்கு மற்றும் கண்கள் போன்றவை நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தகூடியவை என கூறுகின்றனர்.
மேலும் நகங்களை வைத்தே உங்கள் உடல்நிலையை மதிப்பிடலாம்.
நகங்களில் மெல்லிய கோடுகள் தோன்றத் தொடங்கியிருந்தால், அது ஒரு பொதுவான விஷயமாகும். குறிப்பாக, வயது அதிகரிக்கும்போது இது ஏற்படலாம்.
இருப்பினும், சில சமயங்களில் சில உள் காரணங்களாலும் நகங்களில் செங்குத்துக் கோடுகள் தோன்றலாம்.
நகங்களில் நேர்க்கோடுகள் அல்லது கிடைக்கோடுகள் தோன்றினால், அதற்கான காரணம் என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
தோல் நிபுணர் டாக்டர் பவானா வத்வாவின் கூற்றுப்படி, நமக்கு வயதாகும்போது நகங்களில் சிறிய செங்குத்துக் கோடுகள் தோன்றுவது இயல்பானது.
இந்தக் கோடுகள் நகத்தின் அடிப்பகுதியில் இருந்து நுனி வரை நீண்டு காணப்படும். பெரும்பாலானவர்களுக்கு, ஆரம்பத்தில் இந்தக் கோடுகள் லேசாகவும், கண்ணுக்குத் தெரியாதவையாகவும் இருக்கும்.
இருப்பினும், காலப்போக்கில், நகங்கள் மெலிந்து எளிதில் உடையக்கூடியதாக மாறும்போது, இந்தக் கோடுகள் மேலும் தெளிவாகத் தெரியும்.
சில சமயங்களில் இது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படலாம். நகங்களில் தோன்றும் செங்குத்துக் கோடுகள், வைட்டமின் குறைபாடு அல்லது பிற ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம்.
இது இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படலாம்.
அதிகப்படியான சரும வறட்சி மற்றும் நகங்களில் நீர்ச்சத்து குறைதல் சொரியாசிஸ், லைக்கன் பிளானஸ் மற்றும் அழற்சி தோல் நோய்கள் ஹைப்போதைராய்டிசம் முடக்கு வாதம் அமிலாய்டோசிஸ் மற்றும் விட்கோப் நோய்க்குறி போன்ற அரிதான நோய்கள் மெனிக்யூர் அல்லது பெடிக்யூர் செய்யும் போது நகங்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் காயங்கள் நெயில் பாலிஷ் ரிமூவர் மற்றும் கியூட்டிகல் சாஃப்ட்னர்களில் காணப்படும் இரசாயனங்கள் போன்ற காரணங்களாலும் இந்த நகங்களில் கோடுகள் வரலாம்.
![]()