உலகம்

அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை உயர்வு!

கடந்த மார்ச் மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனைத் துறையின் மொத்த விற்பனை அளவு எதிர்பார்த்ததை விட அதிகரித்தது என்று இன்று (24) வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிக்காட்டின.

ஈரான் போர் தொடங்கிய உடனேயே எரிபொருள் விலை உயர்வு குறித்து கவலை கொண்ட பிரிட்டிஷ் வாகன சாரதிகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நோக்கி விரைந்து அதிகளவில் கொள்வனவில் ஈடுபட்டதன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கிய முதல் சில நாட்களில், வழக்கத்தை விட விற்பனை மிகவும் வலுவாக இருந்ததோடு, எரிபொருள் விற்பனை பெப்ரவரி மாதத்திலிருந்து மார்ச் மாதத்தில் 6.1% அதிகரித்துள்ளது என்று அரசாங்கத்தின் தரவுகளை பயன்படுத்திய இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தைத் தவிர்த்து, 2016 ஜனவரிக்குப் பின்னர் எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர அதிகரிப்பு இதுவாகும்.

அதேநேரம் 2026 பெப்ரவரியில் 0.6% சரிவுக்குப் பின்னர், கடந்த மார்ச் மாதத்தில் அனைத்துத் துறைகளின் சில்லறை விற்பனை அளவுகளும் 0.7% உயர்ந்தாக தேசிய புள்ளியல் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *