உலகம்

தென்கிழக்கு ஆசியா – தென் ஆசியா இடையில் புதிய கப்பல் போக்குவரத்து

தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் ஆசியா இடையிலான வர்த்தகத்தில் உறவுகளை விரிவாக்கும் நோக்கி புதிய கப்பல் போக்குவரத்து சேவை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கப்பல் சேவை மூலம் இரு பிராந்தியங்களுக்கிடையிலான கடல் வழி வர்த்தகம் வேகமாகவும், சீராகவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துறைமுகங்களுக்கிடையிலான இணைப்பு மேம்படுவதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயல்முறைகள் குறைந்த நேரத்தில் முடிவடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்த திட்டமானது சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் முயறசியில் உருவாகியுள்ளதுடன், புதிய கப்பல் சேவையானது இந்த நாடுகளின் துறைமுக வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தென் ஆசிய நாடுகளுக்கும் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *