உலகம்

நிலைகுலைந்த போர்நிறுத்தம்; தெற்கு லெபனானில் தாக்குதல் – மீண்டும் பதற்றத்தில் மக்கள்!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்கள், அங்கு நிலவி வரும் பலவீனமான போர் நிறுத்தத்தை நிலைகுலையச் செய்துள்ளன.

 

இந்தத் தாக்குதலில் லெபனான் பத்திரிகையாளர் ஒருவர் உட்பட மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தெற்கு லெபனானில் உள்ள அட்-டிரி (At-Tiri) கிராமத்தில் இந்தத் துயரம் அரங்கேறியுள்ளது

 

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் (Drone) கார் ஒன்றைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

 

இந்த விபத்து நடந்த இடத்தை செய்தி சேகரிப்பதற்காக அல் அக்பர் (Al-Akhbar) நாளிதழின் பத்திரிகையாளர் அமல் கலீல் மற்றும் அவரது சக ஊழியர் ஜெய்னப் ஃபராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.

 

அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், இடிபாடுகளுக்குள் சிக்கி அமல் கலீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

காயமடைந்த பத்திரிகையாளர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் குழுவினரை, இஸ்ரேல் பிரதான சாலையில் தாக்கி தடுத்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

 

இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறுவதாகக் கூறி, ஹிஸ்புல்லா அமைப்பு தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது

 

இஸ்ரேலிய பீரங்கி நிலைகள் மீது ஹிஸ்புல்லா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

 

லெபனான் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு இடையே வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்தத் தாக்குதல் அந்த முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *