பலதும் பத்தும்

துணியால் தயாரிக்கப்பட்ட ஐபோன் Pocket அறிமுகம்

தணித்துவமான வகையில் துணியால் செய்யப்பட்ட $230 (ரூ. 75,000) பெறுமதியான ஐபோன் Pocket ஒன்றை ஆப்பிள் நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. “ஐபோனை உங்கள் சொந்த பாணியில் அணிவதற்கான மகிழ்ச்சி” என்ற கருப்பொருளின் அடிப்படையில் ஐபோன் Pocket வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய பிராண்டான ‘இஸ்ஸே மியாக்கி’ (Issey Miyake) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த ஐபோன் Pocketயை இந்த வாரம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இஸ்ஸே மியாக்கி வடிவமைப்பு, இணையம் மூலமாகவும், உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மூலமாகவும் வெளியிடப்படும் வரையறுக்கப்பட்ட பதிப்புக் சாதனமாகும்.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் இடங்களிலும், அத்துடன் பிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் apple.com மூலமாகவும் 2025 நவம்பர் 14 ஆம் திகதி முதல் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *