பயனரின் பெயர் மூலம் அழைப்பு, செய்தி – வாட்ஸ்அப் புதிய வசதி

தொலைபேசி எண்ணுக்கு பதிலாக, பயனரின் (Usernames) பெயரை பயன்படுத்தி குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கோல் செய்யும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. குறுஞ்செய்தி, வீடியோ கோல் மற்றும் பேமென்ட் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், பயனர்களின் வசதிக்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது மொபைல் போன் எண்களுக்கு பதிலாக, பயன்படுத்துபவர் பெயர் அடிப்படையில் (username) குறுஞ்செய்தி மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.
தனித்துவமான பயனர் பெயர்களை பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், வர்த்தக நிறுவனங்களும் தனித்துவமான பயனர் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
![]()