பலதும் பத்தும்

டைனோசர் எச்சங்களில் செய்யப்பட்ட கைப்பை ஏலத்தில்

உலகில் வாழ்ந்த அரிய உயிரினங்களில் ஒன்றான டைனோசர்களின் எச்சங்களை வைத்து தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, டைனோசர்ஸ் ரெக்ஸ் எனும் டைனோசர்ஸ் படிமங்களில் இருந்து எடுக்கப்பட்ட எச்சங்களைப் பயன்படுத்தி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட தோலால் ஒரு கைப்பை தயாரிக்கப்பட்டுள்ளது.

இது உண்மையான டைனோசர் தோலாக இல்லாதபோதிலும் டைனோர்களின் புரத அமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கைப்பையானது, நெதர்லாந்தின் ஆம்ஸ்ட்ர்டாம் நகரிலுள்ள ஆர்ட் ஸூ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கைப் பை அடுத்த மாதம் ஏலத்துக்கு விடப்படுகிறது.

அதன் ஆரம்ப விலை 5 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *