கட்டுரைகள்

சித்திரைத் தமிழ்ப் புதுவருடப் பிறப்பும் தமிழர் பண்பாடும்…. எது தமிழர் பண்டிகை, குழப்நிலைக்கான தேடல்…. சின்னத்தம்பி குருபரன்

சித்திரைப் புதுவருடப் பிறப்பு என்பது இன, மத எல்லைகளைக் கடந்த ஒரு பண்பாட்டு அடையாளம். அது இயற்கையின் சுழற்சியைக் கொண்டாடுவது, புதிய நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்குவதற்கான நம்பிக்கையை ஊட்டுவது. அறிவியல்பூர்வமான காலக்கணிப்பைப் பின்பற்றுவது எனத் தமிழர்களின் தனித்துவமான அடையாளங்களை உலகுக்குப் பறைசாற்றுகிறது. சித்திரைத் தமிழ் மாதத்தின் முதல் நாள் ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழர்களின் வாழ்வியலோடு பிணைந்துள்ள ஒரு மரபாகும். இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது, வானியல் (Astronomy), வரலாற்றுப் பின்புலங்களைக் கொண்ட ஒரு நிகழ்வாகும்.

தமிழர்கள் காலத்தைக் கணக்கிடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர். சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கருதப்படுவதற்கு முதன்மையான காரணம் சூரியனின் இயக்கம் ஆகும். சூரியன் பூமத்திய ரேகையை நேராகக் கடந்து, மீன ராசியில் இருந்து மேட ராசிக்கு நுழையும் காலத்தைமே சித்திரை முதலாம் நாள் எனக் கணிக்கின்றனர்.”வசந்த காலம்” எனப்படும் இளவேனிற் காலத்தின் தொடக்கமே இதுவாகும். மரம், செடி, கொடிகள் துளிர்விட்டு, பூக்கள் பூத்துக் குலுங்கும் இயற்கையின் புதுப்பொலிவை இது குறிக்கிறது. ஈது எலகின் பல பிரதேசங்களுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்க இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களில் சித்திரை மாதத்தின் சிறப்பு, புத்தாண்டு குறித்த குறிப்புக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. புறநானூற்றில் “திங்கள் மும்மாரி பெய்க” எனத் தொடங்கும் பாடலில் காலச் சுழற்சி, பருவ மாற்றங்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் “இந்திர விழா” சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டதை விவரிக்கிறார். இதனை வசந்த காலத்தின் தொடக்கத்தையும் புதிய ஆண்டின் வரவேற்பையும் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நெடுநல்வாடையில் நக்கீரர் இயற்றிய பத்துப்பாட்டு நூலில், சூரியன் மேட ராசியில் சஞ்சரிக்கும் காலத்தைப் பற்றிக் குறிப்பிடுவது காலக்கணக்கின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பரிபாடலில் வைகை நதியில் நீர் பெருகி வரும் காலத்தையும், சித்திரை மாதத்தின் சிறப்பையும் விவரிக்கின்றன.

2026 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கவிதைகள் | Happy Tamil  Puthandu Wishes 2026 - VALTHUKKAL | தமிழ் கவிதைகள் பெட்டகம்

தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் சித்திரை மாதக் கொண்டாட்டங்களை உறுதிப்படுத்துகின்றன. இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுகளில், சித்திரை மாதத்தில் எடுக்கப்படும் திருவிழாக்கள், அந்த நாளில் வழங்கப்படும் தானங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் மதுரையில் சித்திரைத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இது சமய விழாவாக இருந்தாலும், காலத்தின் தொடக்கத்தோடு தொடர்புடையதாகவே பார்க்கப்பட்டது.

தற்போது நாம் பின்பற்றும் 60 ஆண்டுச் சுழற்சி முறை பிற்காலத்தில் விஜய நகர நாயக்கர் (14-15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) ஆட்சிக் காலத்தில் செல்வாக்குப் பெற்றது. இருப்பினும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலக்கணிப்பு முறை சங்க காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டு, ஆண்டின் முதல் நாள் என்பதால் உரிய சுப வெளையில் மருத்துநீர் தேயத்து, நீராடி, புத்தாடை உடுத்து, இறைவனை வழிபட்டு, இனிப்பு, புளிப்பு, கசப்பு (வேப்பம்பூ), உவர்ப்பு, காரம், துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளையும் உள்ளடக்கிய ‘மாங்காய் பச்சடி’ உண்பது, வாழ்வில் வரும் இன்ப துன்பங்களைச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்நாளில் கைவிசேடம் வழங்குவது பிரதான நிகழ்வாகக் கொள்ளப்படுகிறது. அதனை அடுத்துவரும் நாட்களில் சமய, பண்பாட்டு நிகழ்வுகள், கிராமிய விளையாட்டக்கள், உறவினர்கள், விருந்தினர்கள் வருகை, விருந்துபசாரங்கள் ஆகியன சிறப்பாக நடைபெறும். சித்திரை மாதம் முழுவதும் பல கிராமங்கள் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

தமிழர்களின் வாழ்வியல் விவசாயத்தோடும் இயற்கை மாற்றத்தோடும் சித்திரை ஒன்றிப்போயுள்ளது. பொருத்தமான காலநிலையில் அறுவடை முடிந்து, அடுத்த விதைப்புக்குத் தயாராகும் இடைப்பட்ட காலத்தில், மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட உகந்த நாளாகச் சித்திரை முதலாம் நாளைப் பயன்படுத்தி வந்தனர். இருந்தும் வீடுகளில் நடைபெறும் சுப கருமங்களுக்கு விலக்கழிக்கப்பட்டதாகச் சித்திரை மாதம் கொள்ளப்படுகிறது.

சைவ நெறியைப் பின்பற்றும் தமிழர் தம் வாழ்வியலில் பஞ்சாங்கம் பார்த்துக் கருமங்களைத் தொடங்குவது பண்டுதொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் வழக்காகும். பஞ்சாங்கம் வடமொழி கலந்த நொல். பஞ்சாங்கம் என்பது ஐந்து (பஞ்ச) உறுப்புகளைக் (அங்கம்) கொண்ட காலக்கணிப்பு நூலாகும். ஒரு நாளின் தன்மையை இந்த ஐந்து உறுப்புக்களும் தீர்மானிக்கின்றன. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புக்களையும் கொண்டது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் சுபவேளை, குளிகன், எமகண்டம் ஆகிய உறுப்புக்களோடு மேலும் பல விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. பஞ்சாங்கம் பார்ப்பதற்குத் தனித் திறமை ஒருவரிடம் இருத்தல் வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மூடிநம்பிக்கைகளையும் உருவாக்கி விட்டிருக்கின்றன.

சித்திரை புதுவருடப்பிறப்பு | FOS Media Students' Blog

தமிழர்களின் காலக் கணிப்பில் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்கள் பிரதான இடம் வகிக்கின்றன. இவற்றுக்கிடையே காலக் கணிப்பு முறைகளில் நேர வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதன்படி 2026-ஆம் ஆண்டு தமிழ் சித்திரைப் புதுவருடம் (பராபவ ஆண்டு) பிறக்கும் நேரம் வாக்கிய பஞ்சாங்கப்படி 2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கப்படி 2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை காலை 9.32 மணிக்கும் சூரியன் மேஷ ராசியில் நுழையும் ‘சங்கராந்தி’ நேரமே சித்திரைப் புது வருடப் பிறப்பு நேரமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் காலை 4.30 முதல் பிற்பகல் 12.30 வரை விசு புண்ணிய காலமாகும். கணித, விஞ்ஞான, வானியல், செய்மதிக் கணிப்பின்படி இந்திய, இலங்கை நேரத்தில் அதிகாலை 02.18 மணிக்குச் சூரியன் மீன இராசியில் இருந்து மேட ராசிக்குள் நுழைவதைக் காலக்கணிப்பிட்டுக் கூறியிருக்கிறது. இதன்படி பார்த்தால் புது வருடப் பிறப்பு நெரம் அதிகாலை 02.16 மணியாக இருத்தல் வேண்டும். எது சரியான நேரமென்பது ஆய்வுக்குரிய விடயமாகும்.

இருந்தும் அறிவியல்பூர்வமான கணிபீட்டையே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான வித்தியாசங்கள் பிள்ளைப் பிறப்புக்கான சாதகக் குறிப்புக் (தெரிப்பு) கணிப்பீட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். சூரிய மண்டலத்தில் அனைத்துக் கோள்களும் (கிரகங்கள்) ஒரு இராசியில் இருந்து இன்னொரு இராசிக்கான பெயர்ச்சி ஒரே நேரமாக இருக்குமே தவிர இரு பஞ்சாங்கக் கணப்பீடும் கூறுவது போல் வேறுபட்டதாக இருக்க முடியாது. இந்த வேறுபாட்டக்குக் காரணம் இரு பஞ்சாங்கங்களும் சந்திர மாதத்தை அடிப்படையாகக் கொண்டு கணிப்பிடப்படுவதாகும்.
விஜய நகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ் இந்துக்கள் தை மாதத்தின் முதல் நாளையே தமிழ் புத்தாண்டு (தைத் திருநாள்) நாளாகக் கொண்டாடி வந்தனர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஆரிய, பிராமண, திராவிடர்கள் தமிழர்கள் காலம் காலமாகப் பேணிப் பாதுகாத்து வந்த கணித, விஞ்ஞான, வானியல் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சிச் சான்றாதாரங்கள், இலக்கியங்கள் என்பவற்றை அழித்தும், சிதைத்தும், மூடி மறைத்தும் பலவற்றைத் தமதாக்கியும் இன்னும் பலவற்றை இருட்டடிப்பும் செய்து கொண்டனர்.

Chithirai Kani | வரப்போகுது தமிழ் புத்தாண்டு.. சித்திரை கனி காணுவதால்  என்னென்ன நன்மைகள் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி - News18 Tamil

அவ்வாறுதான் முனிவர்கள் (ரிஷிக்கள்) காலத்தைக் கணித்துச் சூத்திரங்களாகப் பஞ்சாங்க வடிவில் தொகுத்து வைத்திருந்தனர். இதனைக் கைப்பற்றிய ஆரிய, பிராமண, திராவிடக் கூட்டு பெரும்பாலான விடயங்களைச் சமஸ்கிருத வடமொழிக் கலப்புடன் 60 வருடச் சுற்று வட்டமாகக் கொண்டு பஞ்சாங்கங்களை உருவாக்கினர். தமிழர்களின் ஆண்டுத் துவக்கத்தைச் சித்திரை மதத்துக்கு மாற்றினர். சித்திரை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு பஞ்சாங்கத்தைத் தொகுத்தனர். 60 தமிழ் வருடங்களையும் சமஸ்கிருத வருடங்களாக மாற்றினர். ஒரு தமிழ் வருடத்தின் பெயர்கூட 60 வருடச் சுற்றில் முடியாது. இவ்வாறு இருக்கையில் சித்திரைப் புதுவருடப் பிறப்பைத் தமிழ் புத்தாண்டு எனக் கூற முடியுமா?. இலங்கையில் ஆரிய, திராவிடர்களும் (நாயர், நாயக்கர்), ஆரம்ப காலத்தில் மதம் மாறிச் சிங்கள, பௌத்தர்களாக மாறிய தமிழர்களும் சித்திரைப் புது வருடத்தைச் சிங்கள புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

பழந் தமிழ் இலக்கியங்களிலும் சோழர், பண்டியர் கல்வெட்டுக்களிலும் சித்திரை மாதத்தின் முதலாம் நாளைத் தமிழ் புது வருடமாகக் கொண்டாடியமைக்கான சான்றுகள் எதுவுமில்லை. அவை யாவும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்ட விழாக்கள், நிகழ்வுகளைப் பற்றியே குறிப்பிடுகின்றன.

அதுபோக 2026 இல் பிறப்பதாகச் சொல்லப்படும் பராபவ (40) சித்திரைப் புத்தாண்டு உட்பட அனைத்து வருடங்களும் சமஸ்கிருத வடமொழிச் சொல்லாக அமைந்திருப்பதை இதிலுள்ள 60 வருடச் சுற்றும் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன. 1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரௌத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய ஆகியனவாகும்.

தமிழ் இந்துக்களின் புது வருடப் பிறப்பு என்பது தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் திருநாளையே கருதுகிறது. தமிழர்களின் புத்தாண்டு எப்போது என்பது நீண்ட காலமாக அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மக்களிடையே விவாதத்திற்குரிய பொருளாக இருந்து வருகிறது. ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பஞ்சாங்கங்கள், அரச ஆவணங்களில் சித்திரை மாதமே ஆண்டின் தொடக்கமாக இருந்து வந்துள்ளது. தமிழ், ஆங்கில மாதக் கணிப்பின்படியும், உத்திராயன, தக்சிணாயண காலக் கணிப்பின் படியும், காலநிலை, பருவகால மாற்றங்களை ஆதாரமாகக் கொண்டும், விவசாயம், உழவர் திருநாள், தைப்பொங்கல், அதனை அடுத்துவரும் பட்டிப் பொங்கல் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழ்த் தைப் புத்தாண்டு (தை மாதத்தின் முதல் நாள்) நன்னாளில் தமிழர் புத்தாண்டாகக் கருதிக் கொண்டாடி வந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த அறிஞர்களால் தை முதல் நாளைப் புத்தாண்டாகக் கொள்ளும் கருத்து முன்வைக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில் கூடிய 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், ‘தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு’ என்றும் ‘திருவள்ளுவர் ஆண்டு’ அங்கிருந்தே தொடங்குகிறது என்றும் தீர்மானித்தனர். அத்தோடு தை மாதத்தில் அறுவடை முடிந்து, வசந்த காலம் தொடங்குவதாலும், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற நம்பிக்கையாலும் அதுவே தமிழரின் வாழ்வியலோடு இணைந்த புத்தாண்டு என இன்றுவரை வாதிடப்பட்டு வருகின்றன.
பண்டைய இலக்கியமான புறநானூறு போன்ற நூல்களில் ‘தைந்நீராடல்’, தை மாதத்தில் தொடங்கும் விழாக்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு தைமாதத்தையே தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம் இயற்றியது. பின்னர் 2011 ஆம் ஆண்டு அந்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் சித்திரை முதல் நாளே அதிகாரப்பூர்வ புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் காரணம் தமிழ் நாட்டை இன்றுவரை தமிழ் தேசியம் சார்ந்த தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருக்காமையே ஆகும். தமிழ் நாட்டில் சிறுபான்மையினராகிய திராவிடர்கள் ஒன்று திரண்டு ஆட்சி செய்து தமிழர்களில் கலாசாரம், வாழ்வியலை நசுக்கி வருகின்றனர். இருப்பினும், பல தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கருதுகின்றனர். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களில் பலர் சித்திரையையும், கணிசமானோர் தைத்திருநாளையும் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.

சித்திரைப் புத்தாண்டு சிறப்பு - Senpakam.org

அடாவடித் தனங்கள் புரிந்த இந்திரனையும் தேவர்களையும் தட்டிக்கேட்ட புரிந்த இராவணன், நரகாசுரன், பத்மாசுரன் ஆகியோரை அரக்கர், அசூரர்களாக்கித் தமிழ் கடவுளர்களைக் (திருமால், இராமன், முருகன், துர்க்கை) கொண்டு வதம் செய்தது போலான தமிழர்களை இழிவுபடுத்தும் கதைகளை ஆரிய, பிராமண, திராவடக் கூட்டு திட்டமிட்டு உரவாக்கி நூலாக்கினர். நல்லாட்சி புரிந்த அதிசக்தி பொருந்திய தமிழ் மன்னர்களை வதம் செயத தினத்தைத் தீபாவளி என்றும், கந்தசட்டி என்றும், விசய தசமி என்றும் கொண்டாடினர். நாமும் பின்பற்றி வருகின்றொம். இவ்வாறு தமிழர்களை மூடநம்பிக்கை உடையவர்களாக மாற்றுவதற்கு ஆரிய, பிராமண, திராவிடர்கள் உருவாக்கிய வேதங்களையும், ஆகமங்களையும், இதகாச, புராணங்களையும் ஏன்? எதற்கு? எனக் கேள்வி கேட்காமல் அதுவே முழுமையும் எனப் பின்பற்றி வருவது அபத்தத்திலும் அபத்தம்.

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *