உலகம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான் அரசுக்கு 270 பில்லியன் டொலர் நஷ்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களினால் ஈரானுக்கு சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி இந்த நஷ்டம் 270 பில்லியன் டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ள போதிலும், இது இன்னும் இறுதி முடிவல்ல என்று ஈரான் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் முன்னெடுக்கும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் போது, இந்த யுத்த சேதங்களுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதே தங்களது பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *