இலங்கை

தாக்குதல்தாரி ஜமில் மொஹமட்டை பாதுகாத்த புலனாய்வு பிரிவு, சலே

ஈஸ்டர் குண்டு தாக்குதல்தாரியான ஜமில் மொஹமட்டை கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து தெகிவளையில் உள்ள ஒரு விடுதிக்கு கொண்டு சென்று தம்மை விடுமாறு சுரேஸ் சலே கூறியதாக அசாத் மௌலாலானா தெரிவித்து இருந்தார்.

ஆனால் தாம் மட்டக்களப்பில் இருப்பதாகவும் இந்த வேலையை செய்ய முடியாது எனவும் தான் தெரிவித்ததாக அசாத் மௌலானா குறிப்பிட்டு இருந்தார்.

ஏப்ரல் 21 அன்று தாஜ் ஹோட்டலில் இந்த ஜமில் மொஹமட்டோடு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உரையாடியது சுரேஸ் சலேவா என்கின்ற சந்தேகம் இங்கு தான் எழுகின்றது.

அத்தோடு, சுரேஸ் சலேவிற்குரிய இல்லமும் தெகிவளையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018 இல் இருந்தே ஜமில் மொஹமட் சம்பந்தமாக அரச புலனாய்வுப் பிரிவிற்கு நன்றாகவே தெரியும்.இருந்தும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *