பலதும் பத்தும்

ஈசல்கள் மின்விளக்கை சுற்றி வட்டமிடுவதற்கு இது தான் காரணமா?

பொதுவாகவே மழைக்காலம் வந்துவிட்டால் இந்த மழைக்கால ஈசல்களின் தொல்லையும் கூடவே ஆரம்பித்துவிடும்.

ஈசல் பூச்சிகள் பெரும்பாலும் வீதியில் உள்ள மின்விளக்குகளை சுற்றியும், வீட்டில் உள்ள மின்விளக்குகளை சுற்றியும் வட்டமிடுவதை அனைவருமே பார்த்திருப்போம்.

இவை ஏன் வேறு இடங்களில் இல்லாமல் மின் விளக்கை சுற்றியே வட்டமிடுகின்றன என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஈசல் பூச்சுகள் உட்பட இன்னும் சில வகை பூச்சிகள் மின்விளக்கைச் சுற்றி வட்டமிடுவதற்கு முக்கிய காரணம், அவை நிலவு அல்லது நட்சத்திரங்களின் ஒளியைப் பயன்படுத்தி நேர்க்கோட்டில் பயணிக்கப் பழக்கப்பட்டவை என்பதால் தான்.

இயற்கை ஒளியை பின்பற்றி வாழ பழக்கப்பட்ட இவை செயற்கை விளக்குகளின் தீவிரத்தால் குழப்பமடைந்து, விளக்கையே சரியான திசைகாட்டியாக கருதி அதைச் சுற்றி வட்மிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஈசல்கள் மின்விளக்கை சுற்றி வட்டமிடுவதற்கு இது தான் காரணமா? | Why Rain Flies Circle Around Lights

மழை ஈசல்கள் ஒளியை நோக்கிச் செல்லும் இயற்கையான செயற்கூறான நடத்தை கொண்டுள்ளன.அதை அறிவியல் பிரகாரம் அதனை பாசிட்டிவ் ஃபோட்டோ டாக்ஸிஸ் (Positive Phototaxis) என குறிப்பிடுகின்றனர்.

மேலும் மழைக்காலம் என்பது மழை ஈசல்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் சிறந்த நேரமாகும். வெப்பம், ஈரப்பதம் ஆகியவை அதிகரிக்கும் போது, ஈசல் கூட்டத்தில் உள்ள சில பறக்கும் வகை ஈசல்கள் (alates) மாத்திரம் வெளியே வந்து ஜோடி சேரும் முயற்சியில் ஈடுபடுகின்றன.

இரவில் இயற்கை ஒளி குறைவாக இருக்கும். எனவே மின் விளக்குகள் (bulb, tube light) போன்ற செயற்கை ஒளி மட்டுமே இருக்கும். அந்த ஒளியை அவர்கள் வழிகாட்டி என எண்ணி அதனை நோக்கி பயணிப்பதால் தான் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *