பலதும் பத்தும்

சுட்டெரிக்கும் கோடை வெயில்: தாகத்தால் தவித்த மக்களுக்கு கைகொடுத்த நகைக்கடை உரிமையாளர்!

தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, கந்தளாய் நகரில் விசேட மனிதாபிமான நடவடிகையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கந்தளாய் நகர் பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காகவும், கடைகளுக்கும் வருகை தரும் பொதுமக்கள் கடும் வெப்பத்தினால் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதனை கருத்திற்கொண்ட கந்தளாய் நகரின் பிரபல நகைக்கடை உரிமையாளர், நகருக்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாகக் குளிர்பானங்களை வழங்கி அவர்களின் தாகத்தைத் தணித்து வருகின்றார்.

வியாபார நோக்கங்களுக்கு அப்பால், இக்கட்டான இக்காலப்பகுதியில் பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தச் செயலை அப்பகுதி மக்களும் ஏனைய வர்த்தகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *