பலதும் பத்தும்

பாகிஸ்தானின் 2 போர்க் கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NIAMAT SAEED KHAN செயற்படுகிறார்.

அதேபோல், ‘PNS ASLAT’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NADIR MATEEN AFRIDI செயற்படுகின்றார்.

மேலும், இந்த போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியொன்றிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *