கவிதைகள்

மறக்க முடியாமல் மனங்கலங்கி நிற்கின்றோம்! … ஜெயராமசர்மா. 

ஞானம் அண்ணா மறைந்தார்
நம்பவே முடிய வில்லை
பண்பான மனிதர்
பக்குவமாய் பழகுவார்
புன்முறுவல் காட்டி
புத்தூக்கம் அளித்திடுவார்
அவரை விரும்பாதார்
இருப்பதாய் நானறியேன்
அறிவுள்ள மருந்துவர்
அமுதத்தமிழ் வித்தகர்
ஞானத்தை எமக்களித்து
தன்ஞாபகத்தை ஊட்டி
நிறைவாக வாழ்ந்து
நிம்மதியாய் ஆகிவிட்டார்
பிரிவாலே வாடும்
குடும்பத்தார் துயரில்
நாமும் கலந்து
ஞானமாம் அண்ணாவை
மறக்க முடியாமல்
மனங்கலங்கி நிற்கின்றோம் !

ஜெயராமசர்மா
மெல்பேண்
ஆஸ்திரேலியா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *