பலதும் பத்தும்

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா

ஐபில் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நேற்றையப் போட்டியில் சர்மா 78 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சர்மா 1,161 ஓட்டங்களை குவித்துள்ளார்.

முன்னதாக, விராட் கோலி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,159 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

அதன்படி, விராட் கோலியின் சாதனையை முறியடித்தசர்மா, தற்போது ஐபிஎல் போட்டிகளின் வரலாற்றில் ஒரே அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,146 ஓட்டங்கள் எடுத்திருப்பதால், விராட் கோலி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் தக்கவைத்துள்ளார்.

அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,134 ஓட்டங்கள் எடுத்து நான்காவது இடத்தில் உள்ளார்.

இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நேற்றைய (29) போட்டியின் போது நான்காவது இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

சர்மா இதுரை 273 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 268 இன்னிங்ஸ்களில் 48 அரை சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி 64 அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *