பலதும் பத்தும்

தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் சுமார் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளன. இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடுவதை விட, ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைத்து, இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

அதுவும் தினமும் ஒரு வேக வைத்த நெல்லிக்காயை சாப்பிடும் போது, உடலினுள் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுவதைக் காணலாம். இப்போது தினமும் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Vega Vaithta Nellikai Sapituvathal Kitaikum Nanmai

செரிமானம் மேம்படும்

நெல்லிக்காயை ஆவியில் வேக வைத்து சாப்பிடும் போது, உடலின் மெட்டபாலிசம் மேம்படும். மேலும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்பட்டு வருபவர்கள், இதை சாப்பிடும் போது, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணமும் கிடைக்கும்.

தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Vega Vaithta Nellikai Sapituvathal Kitaikum Nanmai

நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

ஆவியில் வேக வைத்த நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கும். இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக செயல்பட்டு, உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்ப்பதோடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சளி, இருமல் போன்ற தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனை அதிகரிக்கிறது.

தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Vega Vaithta Nellikai Sapituvathal Kitaikum Nanmai

சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இதன் மூலம் சருமத்தின் அமைப்பு மேம்படுவதோடு, சருமமும் பளபளப்பாக இருக்கும். கூடுதலாக நெல்லிக்காய் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடி உதிர்வதைக் குறைக்கிறது மற்றும் முடியின் அடர்த்தியையும், வலிமையையும் அதிகரிப்பதோடு, முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Vega Vaithta Nellikai Sapituvathal Kitaikum Nanmai

இதய நோய் தடுக்கப்படும்

ஆவியில் நெல்லிக்காயை வேக வைத்து சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயம் குறைகிறது. அதுவும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.

தினமும் ஆவியில் வேக வைத்த 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Vega Vaithta Nellikai Sapituvathal Kitaikum Nanmai

கண்களுக்கு நல்லது

கண் பார்வையை மேம்படுத்த வேண்டுமானால் தினமும் ஆவியில் வேக வைத்த ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகுள் கண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. தொடர்ந்து வேக வைத்த நெல்லிக்காயை உட்கொள்ளும் போது, அது வயது தொடர்பான கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *