முச்சந்தி
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பதவி ஏற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதியும் கணக்கியல் துறை சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி இன்று புதன்கிழமை பதவி ஏற்கவுள்ளார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் நடைபெறவுள்ள விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து முற்பகல் 9.30 மணிக்கு துணைவேந்தர் அலுவலகத்தில் வேல்நம்பி உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று பதிவாளர் வி. காண்டீபன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக சுமார் ஆறு வருடம் பதவி வகித்து வந்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வுபெற்றுள்ளார்.
![]()