பலதும் பத்தும்

யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் – பெரும் அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு, சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் நின்ற தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்து அட்டகாசம் செய்துள்ளன.

குறித்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யானைகளை வனஜீவராசிகள் திணைக்களம், வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து விட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி, கிழக்கில் சுண்டிகுளத்திலிருந்து வெற்றிலைக்கேணி வரை வனஜீவராசிகள் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் அப்பிரதேசங்களில் இதுவரை யானைகள் காணப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் குறித்த யானைகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப்பாட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து விடப்பட்ட யானை ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகி குறித்த பகுதியில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *