உலகம்

புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாக குடியேறுவதைக் கடினமாக்கும் அரசாங்கத் திட்டங்கள் நம்பிக்கைத் துரோகமானது

புலம்பெயர்ந்தோர் நிரந்தரமாக குடியேறுவதைக் கடினமாக்கும் அரசாங்கத் திட்டங்கள் நம்பிக்கைத் துரோகமானவையென நாடாளுமன்ற உறுப்பினர் ஏஞ்சலா ரெய்னர் (Angela Rayner) கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்களின் நிரந்தர வசிப்பிடத்திற்குத் தகுதி பெறும் காலத்தை 05 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தவும், அகதிகளுக்கு 20 ஆண்டுகளாக நீடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மாற்றங்கள், மக்கள் எதிர்காலம் குறித்து அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதேவேளை, உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) இந்த சீர்திருத்தங்கள் நியாயமானவை என்றும், பொது நிதிச்சுமையை குறைக்க அவை அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *