இலங்கை
மாணவர்கள் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று போராட்டம்

கடந்த பெப்ரவரி மாதம்-04 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை (19.03.2026) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்து யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று முற்பகல்- 10 மணியளவில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். எனவே, அனைத்து மாணவர்களையும், அனைத்துத் தரப்புக்களையும் மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
![]()