பலதும் பத்தும்

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

உலகிலேயே மிகவும் ஆடம்பரமான பழங்களில் ஒன்று இந்த ஜப்பானிய முலாம் பழம். இதன் விலை 16 லட்சமாகும். இதற்கான காரணத்தை பதிவில் பார்க்கலாம்.

உலகில் ஜப்பான் நாட்டு பழங்களுக்கென்று சந்தையில் மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. உலகில் பிரபலமாக ஆடம்பர பழங்கள் எல்லாம் ஜப்பானில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றது.

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? | Most Expensive Fruit Japans Fruit King Melon Price

ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த யுபாரி கிங் முலாம்பழம் ஜப்பானின் மிகவும் ஆடம்பரமான பழமாக கருதப்படுகின்றது.

அதிக சாறு, நல்ல இனிப்பு, வெண்ணெய் போல கரையும் மென்மையான சதை என இவை அனைத்தும் ஒரே பழத்தில் கிடைப்பதால் இது மிகவும் பிரபலமான பழமாக இருக்கின்றது.

இந்த பழம் மிகவும் விலை அதிகமாக விற்கப்படுகின்றது. அதற்கு காரணம் இந்த பழத்தினை யுபாரி பகுதியில் மட்டுமே இதை வளர்க்க முடியும்.

16 லட்சத்திற்கு ஒரு பழமா? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? | Most Expensive Fruit Japans Fruit King Melon Price

அங்கே மட்டும் தான் பயிரிடப்படும் மண் எரிமலை தாதுக்களால் ஆனது. இது மட்டுமல்ல இங்குள்ள காலநிலை மற்றும் வெப்பநிலை போன்றவை இந்த பழம் வளர ஒரு காரணமாக அமைகிறது.

இது மிகவும் கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுசூழலில் வளர்க்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மிக குறைந்த அளவிலே உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்த பழம் ஒரு ஏலத்தில் 33 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது. 33 லட்சத்திற்கு இரண்டு பழங்கள் விற்கப்படுகின்றது என்றால் ஒரு பழம் 16 லட்சம். இந்த பழத்தின் விலை உலக சாதனை படைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *