முச்சந்தி

மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலி.! மாமனார் படுகாயம்; யாழில் பயங்கரம்

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் மருமகனின் வாள்வெட்டில் மாமியார் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதவது,

வடமராட்சி பருத்தித்துறை, கிராமக்கோடு பகுதியில் மனைவியின் தந்தையாரை வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு, மனைவியின் தாயாரையும் வாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் நபரே மாமனாரை படுகாயப்படுத்திவிட்டு மாமியாரை படுகொலை செய்துள்ளார்.

வாள்வெட்டு சம்பவத்தை தொடர்ந்து பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான 5க்கு மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *