உலகம்

ஈராக் தலைநகரில் பாதுகாப்பு பதற்றம்; அமெரிக்கத் தூதரக முகாம் மீது தாக்குதல்

ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் தளவாட ஆதரவு முகாம் (Logistical support camp) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அல் ஜசீரா வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்கத் தூதரகத்திற்குச் சொந்தமான இந்த முகாம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஈராக் தலைநகரின் இந்தப் பகுதி தொடர்ச்சியாகத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகளோ அல்லது கட்டமைப்புச் சேதங்களோ ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *