இலங்கை

மத்திய கிழக்குப் போரினால் இலங்கை தேயிலைக்கு ஆபத்து;  ஒரு வாரத்தில் 15 மி.டொலர் நஷ்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் உக்கிரமடைந்துள்ள போர் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதித் துறை வீழ்ச்சி கண்டு வருகின்றது.கடந்த ஒரு வாரத்தில் சுமார் 15 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதென தேயிலை ஏற்றுமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு மற்றும் அதிகரித்துள்ள போர் அச்சுறுத்தல் காரணமாகவும் சில மத்திய கிழக்கு நாடுகள் தேயிலை கொள்வனவை மட்டுப்படுத்தியுள்ளன என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை தொடருமானால் நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு அந்நிய செலாவணி வருமானம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேயிலைத் துறையைப் பொறுத்த வரை தேயிலை உற்பத்தியில் சுமார் அரைவாசியை மத்திய கிழக்கு நாடுகளே கொள்வனவு செய்கின்றன.அந்த வகையில் வருடாந்தம் தேயிலை ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானத்தில் 530 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் மத்திய கிழக்கு நாடுகள் மூலமே கிடைக்கின்றன.

தேயிலை ஏற்றுமதி தொடர்பான தரவுகளின் படி இலங்கையானது உள்நாட்டு உற்பத்தி தேயிலையில் 31 வீதத்தை டுபாய் நாட்டுக்கும் 18 வீதத்தை சவுதி அரேபியாவுக்கும் 12 வீதத்தை ஈரானுக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் உக்கிரமடைந்துள்ள போர் காரணமாக இலங்கையின் தேயிலை ஏற்றுமதித் துறை வீழ்ச்சி கண்டு வருகின்றது கடந்த ஒரு வாரத்தில் சுமார் 15 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதென தேயிலை ஏற்றுமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *