சலேவுக்கு அனைத்தும் முன்கூட்டியே தெரியும்; பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் தொடர்பில் சுமார் ஒரு வருட காலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சலே கைது செய்யப்பட்டார்.மேலும் இந்த விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய,உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானிக்கு முன்கூட்டியே முழுமையான தகவல்கள் கிடைத்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இதனடிப்படையில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தீர்மானிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட போதிலும், விசாரணைகளுக்குத் தேவையான நபர்களைக் கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.இங்கு அத்தகைய சட்டபூர்வமான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
![]()