உலகம்

யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்; கெரி ஆனந்தசங்கரி

கனடாவில் யூதர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி கடுமையாக கண்டித்துள்ளார்.

அண்மையில் டொராண்டோ பெரும்பாக பகுதியில் உள்ள பல யூத வழிபாட்டுதலங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவங்கள், யூத விரோத வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான கவலைக்கிடமான அடையாளமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை மிகக் கடுமையாக நான் கண்டிக்கிறேன் எனவும் இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யூத விரோதம் வன்முறையாக மாறும் நிலை கனடாவின் வழி அல்ல.

இதை எங்களால் சகிக்க முடியாது; இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

மேலும், வெறுப்பு குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையுடன் மற்றும் பிற அரசாங்க நிலைகளுடன் கூட்டாக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் ஒவ்வொரு யூத குடிமகனும் பாகுபாடு மற்றும் யூத விரோதத்திலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ உரிமை பெற்றவர்கள். ஒரு வழிபாட்டுத் தலங்களை தாக்குவது என்பது கனடாவையே தாக்குவதற்கு சமம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், டொராண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடம்பெற்ற இந்த தாக்குதல்கள் குறித்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதுடன், யூத சமுதாயப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *