நிகழ்வுகள்

தலவாக்கலையில் சிறப்பாக இடம்பெற்ற தவக்கால இறை ஒப்புரவு தியான வழிபாட்டு நிகழ்வு

இறை ஒப்புரவு தியானமும் குணமளிக்கும் வழிபாடும் தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (07) காலை 9 மணி தொடக்கம் 3 வரை  சிறப்பாக நடைபெற்றது.

ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார் மற்றும் உதவி பங்குத்தந்தை ரன்ஜித லக்ஷான் ஆகியோரது வழிநடத்தலின் கீழ் முன்னாள் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில், திருகோணமலை மறைமாவட்ட குரு முதல்வர் அருட் கலாநிதி போல் றொபின்சன் அடிகளார் தவக்கால இறை ஒப்புரவு தியானமும் குமளிக்கும் வழிபாட்டினை சிறப்பாக  வழி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ் இறை ஒப்புரவு தியான நிகழ்வுக்கு மலையகத்தின் பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன். திருகோணமலை மறைமாவட்ட குரு முதல்வர் அருட் கலாநிதி போல் றொபின்சன் அடிகளாருக்க ஆலய பங்குத்தந்தை மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *