நிகழ்வுகள்

மெல்பேர்ணில் தமிழ் மொழி சாதனை விழா!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

மெல்பேர்ணில் தமிழ் மொழி சாதனை விழாவுடன், சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் விழா எதிர்வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

அவுஸ்திரேலிய, தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், விக்றோறிய மாநிலத்தில், பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வாகிய,விக்றோரிய கல்விச் சான்றிதழ் ( VCE ) பரீட்சையில், தமிழ் மொழிப் பாடத்தில் சாதனை புரிந்த மாணவர்களப் பாராட்டும் ஒரு விழாவைக் கடந்த சில வருடங்களாக நடத்தி வருகின்றது.

கடந்த வருடம் (2025) நடைபெற்ற அந்தப் பரீட்சையில் அவ்வாறு சாதனை நிகழ்த்திய மாணவர்களைப் பாராட்டும் விழா எதிவரும் 09.03.2026 – திங்கட்கிழமை, பி.ப. 5.00 மணிக்கு Clayton Hall, 264, Clayton Road, Clayton Vic 3168 எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

உயர்தர தமிழ் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களைப் பாராட்டுவதுடன், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் பணியும் பாராட்டிக் கௌரவிக்கப்படத்தக்கதாகும். அதனால், இந்த நிகழ்வில் ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்று,அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில், செல்விகள் மோஷிகா பிரேமதாச, ஸ்ரீஷேகா பிரேமதாச சகோதரிகளின் வீணைக் கச்சேரி, செல்வன் நிஷித் ராஜன்பாபுவின் மெல்லிசைப் பாடல், துசியந்தி ராஜராஜன், வினுசாகினி இராஜராஜன் சகோதரிகளின் நடனம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும், சங்கத்தின் உபதலைவர், திரு. கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், முதுபெரும் எழுத்தாளர், திரு. லெ.முருகபூபதி அவர்கள், சேவைநலன் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளார். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் அன்புடன் அழைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *