பலதும் பத்தும்
மத்திய கிழக்கில் போர் வெடித்ததால் இரத்தினபுரியில் ஆட்டோ கட்டணம் உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் இடம் பெற்றுள்ள போர் பதற்ற நிலையை தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிகள் தமது கட்டணத்தை திடீரென அதிகரித்துள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி நகரில் சில முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழமையான கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறிவிடுகின்றனர்.
150 ரூபா கட்டணத்திற்கு 200 ரூபாவாக அறவிடுவதுடன் 200 ரூபா கட்டணத்திற்கு 250 ரூபாவும் கட்டணமாக அறவிடுகின்றனர். இது குறித்து தாம் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் அங்கலாய்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை மாவட்டதில் நேற்றும் (03) நீண்டவரிசையில் எரிபொருள்களை நிரப்பும் பொருட்டு முச்சக்கர வண்டிகளும் மோட்டர் வண்டிகளும் காத்திருந்ததை காணக்கூடியதாகவிருந்தது.
![]()