உலகம்

உலகில் குறையப்போகும் எரிபொருள் விலை; ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!

ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம் திகதி ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் இராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால், மசகு எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிரான போருக்குப் பிறகு எண்ணெய் விலை குறையும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறிது காலத்திற்கு மசகு எண்ணெய் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றும் ஈரானுக்கு எதிரான போருக்குப் பின்னர் முன்பைவிட விலை குறைவடையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கடற்படை பாதுகாக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *