விஸ்தரிக்கப்பட்டு வரும் ஈரானின் பதிலடி பெரும் போர் முனையாக மாறிவரும் அரபு நாடுகள்; ஈரானின் 130 நகரங்கள் மீது ஒரே நாளில் அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்

இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடரும் நிலையில், ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த மோதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், 3வது நாளாக மோதல் நேற்று திங்கட்கிழமை மேலும் உக்கிரமடைந்த நிலையில் மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல்களை தொடுத்து வரும் அதே நேரம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்குதலினால் 555 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை என்று சாக்கு சொல்லி, ஈரான் மீது இஸ்ரேல் உடன் கூட்டு சேர்ந்து 2வது நாளாக அமெரிக்கா இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத் தலைவர் கமெனி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.
ஈரானை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உட்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சைரன்கள் அலறும் சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் தொடர்ந்து பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல், டுபாய், கட்டார் உள்ளிட்ட நாடுகளில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தெற்கு சைப்பிரஸில் உள்ள பிரிட்டிஷ் இராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் குறித்து சைப்பிரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
நள்ளிரவுக்குப் பிறகு, “ஷாஹெட் ஆளில்லா வான்வழி வாகனம்” அக்ரோதிரியில் உள்ள இங்கிலாந்து இராணுவ வசதிகள் மீது மோதியதில் “சிறிய பொருள் சேதம் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைப்பிரஸ் “எந்த இராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்க விரும்பவில்லை” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானியா, தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சைப்பிரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹர்முஸ் ஜலசந்தியில் ‘ஸ்கைலைட்’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்கள் இருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும், அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
ஈரானை தொடர்ந்து லெபனான் நாட்டிலும் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இராணுவ நடவடிக்கை பெரும்பாலும் திட்டமிட்டபடியே நடந்து வருகிறது. அவர்களின் ஒட்டுமொத்த தலைவர்களையும் நாங்கள் அழித்துவிட்டோம் – 48 பேர் ஈரான் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்கள் அனைத்து இலக்குகளும் அடையும் வரை அவை தொடரும். நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரான் ஆட்சி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC)கடந்த 47 ஆண்டுகளில் 1,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொன்றது. இப்போது அமெரிக்கா நடத்திய பெரிய தாக்குதலில் பாம்பின் தலை வெட்டப்பட்டுள்ளது.. அமெரிக்கா பூமியில் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டுள்ளது. இனிமேல், IRGCக்கு தலைமையகம் என்று எதுவும் இல்லை என அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) அதிகாரி கூறியுள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் வெடிமருந்து களஞ்சியத்தை ஈரானிய ஆளில்லா விமானம் தாக்கியது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான்.
அணு குண்டால் மட்டுமே, முழுமையாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டாக சொல்லப்பட்ட, அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றான ஆபிரகாம் லிங்கன் மீது ஈரான் தாக்குதல். பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் சேதம்
மத்திய கிழக்கில், தனது ராணுவ தளத்திலிருந்து வெளியேற்றி வீரர்களை, துபாயில் 5 ஸ்டார் ஓட்டல்களில் அமெரிக்கா தங்க வைத்திருந்தது. அந்த ஓட்டல்கள் மீது மீது ஈரான் தாக்குதல்.
ஹர்முஸ் ஜலசந்தியில் சென்ற கப்பல் மீது ஈரான் ஆதரவு படைகள் தாக்குதல். Sky Light என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதோடு அதன் அருகில் சென்று வீடியோ எடுத்து வெளியீடு.
இஸ்ரேலிய விமானப்படை தெஹ்ரான் மீது புதிய அலைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. தெஹ்ரானில் பல பகுதிகள் தாக்கப்பட்டதால் முழு நகரமும் பெரிய புகை மூட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஈரான் அரசின் கட்டளை மையங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஈரானின் வான்வழிகளை வசமாக்கியுள்ளோம். தலைநகர் தெஹ்ரானுக்கு மேலே பறந்து ஏராளமான இலக்குகளை இஸ்ரேலிய விமானப்படை அழித்து வருகிறது.
பலஸ்டிக் ஏவுகணைத் தளங்கள், தலைமையகங்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு, உத்தரவு மையங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் அழித்துவிட்டோம். இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய 50-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலின் விமானப்படை ஜெட்களும் ராணுவ ஹெலிகாப்டர்களும் இடைமறித்து அழித்துவிட்டன’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()