இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொது மக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் பெளர்ணமி நாளான நேற்றுத் திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்பட்டது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமாகிய போராட்டம் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது.

நேற்றைய தொடர் போராட்டத்தில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னனணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். போராட்ட இடத்துக்கு அருகில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *