உலகம்

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இலங்கை பெண் காயம்

வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப்பணிப் பெண் ஒருவர் சிறியளவில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவரது காயங்கள் பாரதூரமானவை அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தங்கியிருந்த வீட்டிற்குத் தாக்குதலில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *