உலகம்
மத்திய கிழக்கு போர் அபாயம் குறித்து புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளின் நான்கு முக்கிய தலைவர்களுடன் அவர் உரையாடியுள்ளார்.
சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் புடின் மேற்கொண்ட உரையாடலுக்குப் பிறகு கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் “ஏற்கனவே பல அரபு நாடுகளின் எல்லைகளைப் பாதித்துள்ள இந்த மோதல் மண்டலம் மேலும் விரிவடையும் அபாயம் குறித்து இரண்டு தலைவர்களும் கவலை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகள் குறித்தும் இரு தரப்பினரும் கடும் கவலை தெரிவித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
![]()