நிகழ்வுகள்
சிட்னியில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு.

அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெள்ளிக்கிழமை (27/2/26) வெளியிடப்பட உள்ளது.“தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய
ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீடு பெப்ரவரி 27ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது.
பெமுள்வே சமூக மண்டபம் (Allan G Ezzy Community Centre,(Near Woolworths) 1 Newport St, Pemulwuy, NSW 2145. எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் மாலை 1830 முதல் 2100 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வு மூத்த எழுத்தாளர் திரு. மாத்தளை சோமு அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் அறிமுக உரையை கவிஞர் திரு. குவேந்திரன் அவர்கள் உரையாற்றுவார். அத்துடன் நூல்களின் ஆய்வுரைகளை சிட்னி இலக்கிய ஆர்வலர்கள் வழங்குவார்கள்.
தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள் எனும் நூலுக்கு திரு. திரு. அநதீரன் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும் என்ற நூலை திருமதி. பைந்தளிர் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.

முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் குறித்த நூல் ஆய்வை திரு.ம.தனபாலசிங்கம் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார்.
இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற நூல் குறித்த ஆய்வை
திரு. கிருஷ் ஆனந்த் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். அத்துடன் இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள் பற்றிய நூலாய்வை திருமதி தேவி பாலா அவர்கள் நிகழ்த்துவார்.
மேலும் தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் என்ற நூலை திரு. பொன்ராஜ் அவர்கள் நூலாய்வுரை நிகழ்த்துவார். அத்துடன் இந்நிகழ்வில் சிறப்புரையை சிட்னியின் புகழ்பெற்ற வானொலி ஒலிபரப்பாளர் திரு. திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களும் உரையாற்றுவார்.
சிட்னி மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.
![]()