ATM-ல் பணம் எடுக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பணம் வெளியில் வருமா?

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் என்னாகும் பணம் வெளியில் வருமா என்பதை பதிவில் பார்க்கலாம்.
வங்கிகளில் பணத்தைசேமிக்க தொடங்கிய முற்காலத்தில் நமக்கு அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று வரிசையில் நினறு பணம் எடுக்கும் சூழ்நிலை இருந்தது.
ஆனால் ATM அறிமுகப்படுத்திய பின்னர் வங்கியில் வரிசையில் நினறு பணம் எடுக்காமல் ஒவ்வொரு நாளிலும் எந்த நாளில் எப்போது பணம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றானது.
இந்த சேவை 24 மணி நேரமும் நமக்கு இருக்கும். இதனால் நம் நேரமும் மிச்சப்பட்டது. இவ்வளவு நன்மை இருந்தாலும் ATM-ல் இருந்து பணம் எடுக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் என்னாகும் என்பதை யாராவது யோசித்து உள்ளீர்களா? இதை பதிவில் பார்ப்போம்.
நாம் ATM-ல் பணம் எடுக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் கூட நம்மால் பணத்தை எடுக்க முடியும். காரணம் அதில் பேக்அப் (backup) நிறுவப்பட்டுள்ளது. ஆனால் ஒருவேளை மிகவும் பழைய ATM என்றால் அதில் சில வேளை பணம் சிக்கி கொள்ளும்.
ஆனாலும் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். ரிசர்வ் வங்கி விதிகளின்படி, வங்கிகள் 24 மணி நேரத்திற்குள் அந்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.
சில நேரங்களில் இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப தரப்படும். ஒருவேளை 24 மணி நேரத்திற்குள் பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் வாடிக்கையாளர் அதுகுறித்து வங்கியில் புகாரளிக்கலாம். இந்த புகாரை தொடர்ந்து அவர்களுக்கு புகார் கொடுக்கப்படும்.
![]()