நிகழ்வுகள்

இந்தியாவில் இடம் பெற்ற Silambam World Cup & Traditional Arts Festival 2026 சிலம்பம் போட்டியில் இலங்கை சாதனை

World Union of Silambam Federation நடத்திய 2nd Silambam World Cup & Traditional Arts Festival 2026 கடந்த 13, 14, 15 ஆம் திகதிகளில் Hosur, India இல் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சர்வதேச மட்டப் போட்டியில் மொத்தம் 6 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அதில் Sri Lanka Silambam Federation சார்பாக கலந்து கொண்ட இலங்கை அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்து மொத்தம் 29 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 24 வெண்கலப் பதக்கங்கள் வென்று, மொத்தப் பதக்க எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியை தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தியவர் ஆசான் ரா. திவாகரன் ஆவார். அவரது திறமையான வழிகாட்டலும், வீரர்களின் ஒற்றுமையும், கடின உழைப்பும் இணைந்து இவ்விசேட வெற்றியை இலங்கைக்கு பெற்றுத்தந்துள்ளது.

சர்வதேச அரங்கில் இலங்கையின் சிலம்பக் கலையின் திறனை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ள இந்த சாதனை, நாட்டின் சிலம்ப வளர்ச்சிக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

இவ்வெற்றியைப் பெற்ற அனைத்து வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் மற்றும் ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *