மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பில் பழமை வாய்ந்த ஜோதிலிங்க தரிசன வழிபாடுகள்

மகா சிவராத்திரி முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிவ வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 ஜோதிலிங்க தரிசன வழிபாடுகள் இடம்பெற்றன.
சிவராத்திரியின் மகிமை பொதுமக்களின் மனக்குறையை தீர்க்கும் மகா யாகம் கொண்ட நிகழ்வும் முன்னெடுக்கப்படுவதுடன், சிவலிங்க வழிபாடுகளும் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெறுகின்ற இந்த ஜோதிலிங்க தரிசன நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் சேர்க்கும் சமூகப் பணியும் முன்னெடுக்கப்பட்டது.சிவராத்திரி வழிபாடுகளை முன்னிட்டு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
![]()