பலதும் பத்தும்

டெல்லியில் இன்று ஏஐ உச்சி மாநாடு ஆரம்பம்!

டெல்லி பாரத் மண்டபத்தில் இந்திய ஏ.ஐ. தாக்கம் உச்சி மாநாடு இன்று முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அதனுடன் அதே மண்டபத்தில் ‘இந்திய ஏ.ஐ. தாக்கம் கண்காட்சி-2026’ என்ற கண்காட்சியும் இதே காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை இந்திய பிரதமர் மோடி இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

ஏ.ஐ. துறையில் இந்திய மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கும்வகையில் இக்கண் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், சர்வதேச பங்குதாரர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் நிகழ்வாக இது அமையும்.

ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், அவுஸ்திரேலியா உள்பட 13 நாடுகளின் அரங்குகளும் இடம்பெறும்.

நேரடி செயல் விளக்கங்களும் காணலாம். 500-க்கு மேற்பட்ட அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 600-க்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.

5 நாட்களில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *