பலதும் பத்தும்

பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங்; வரவுள்ள புதிய தடை

பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்யும் புகைப் பழக்கத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் மற்றும் நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின் படி, குழந்தைகளுடன் காருக்குள் பயணிக்கும் போது புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் கருவிகளை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் கருவிகளை பயன்படுத்த கூடாது.

மருத்துவமனை அருகில் மற்றும் உள் விளையாட்டு அரங்கங்களுக்குள் ஏற்கனவே புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவெளை இந்த தடை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க 12 வார கருத்துக் கேட்பு ஆலோசனை கூட்டம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கருத்துக் கேட்பு ஆலோசனை கூட்டம் மே 8ம் திகதி அன்று நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டம் பிரித்தானியா அரசின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான சுகாதார திட்டத்தின் ஒரு பகுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *