உலகம்

சர்ச்சையை கிளப்பிய அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பேட்டி

வேற்று கிரகவாசிகள் என சொல்லப்படும் ஏலியன்கள் உலகில் இருக்கிறதா இல்லையா என்கிற கேள்வி பல வருடங்களாகவே இருக்கிறது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. பூமி எனும் கிரகத்தில் மக்கள் வசிப்பது போல பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களில் ஏலியன் வசிக்கலாம் என குறிப்பிட்ட சதவீதம் பேர் நம்புகிறார்கள்.

ஒருபக்கம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வாகனங்கள் (UFO) மூலம் ஏலியன்கள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும், சிலர் அதை பார்த்ததாகவும் செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால் அவையெல்லாம் நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஏலியன்கள் இருப்பது உண்மைதான் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபமா கூறியிருப்பது உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு youtube சேனல் நேர்காணலில் பேசிய அவர் ‘ஏலியன்கள் இருப்பது உண்மை என நான் நம்புகிறேன். அதே நேரம் நான் நேரில் பார்த்ததில்லை.. வானத்தில் அடையாளம் தெரியாத பொருட்கள் வருவது பற்றி பதிவுகள் இருக்கிறது.

அதேநேரம் Area51 போன்ற ரகசிய இடங்களில் அமெரிக்கா ஏலியன்களை வைத்துள்ளதாக பரவும் கதைகள் முழுக்க கற்பனை மட்டுமே.. ஒருவேளை அமெரிக்க அதிபருக்கே தெரியாமல் ஒரு சதி திட்டம் மூலம் ஏலியன்களை மறைத்து வைத்திருக்கிறார்களோ என்னவோ எனக்கு தெரியாது’ என்று நகைச்சுவையாக பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *