உலகம்

கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி

கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில மக்கள் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனால் இந்தப் பகுதியில் பல பிரிவினைவாத குழுக்கள் உருவாகியுள்ளன.

இந்தக் குழுக்கள் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை நடத்தும் நோக்கில் கையெழுத்துகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.  தனி நாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்த மே 2ஆம் திகதிக்குள் குறைந்தபட்ச எண்ணிக்கையான 1 இலட்சத்து 77ஆயிரம் கையெழுத்துகளை இந்தக் குழுக்கள் திரட்ட வேண்டும்.

இந்த நிலையில் கனடா அரசாங்கத்துக்கு எதிரான நிலைபாடுகளை கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சுகள் நடத்தி தமது உறவை வலுப்படுத்துவதன் மூலம் வெற்றிபெறலாம் இந்த பிரிவினைவாத குழுக்கள் கருதுவதாகவும், டிரம்புடன் உறவை வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் கனடாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *