இலங்கை
நான்கு பிக்குகளையும் விடுதலை செய்யுங்கள்; விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரை சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர்சிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், விகாரையில் பிக்கு இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் குரலெழுப்பினர்.
அத்துடன் சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்படி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
![]()