முச்சந்தி

மகா சங்கத்தினரும் அரசால் பழிவாங்கல்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

தற்போதைய அரசாங்கம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பழிவாங்குவதாகவும், குறிப்பாக மகா சங்கத்தினரை இலக்கு வைத்து திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (09) விசேட அறிக்கையொன்றை விடுத்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் படி பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

அதேபோல் ஏனைய மதங்களையும் கலாசாரங்களையும் மதிக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் நாட்டை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மதகுருமார்களை பழிவாங்குவதை உடனடியாக நிறுத்தி, அனைத்து மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விவசாயிகள் அறுவடை செய்துள்ள போதிலும், அவற்றுக்கு நியாயமான விலையை வழங்கவோ அல்லது அவற்றை முறையாகக் கொள்வனவு செய்யவோ அரசாங்கம் தவறிவிட்டது.

நெல் களஞ்சியசாலைகள் பூட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், விவசாயம் முடிவடைந்தும் இன்னும் உர மானியம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *