கவிதைகள்

ஆளுமையாம் சங்கர் அழவிட்டுப் போனார்!… கவிதை… ஜெயராமசர்மா

படுத்தவர் படுத்தபடி படுக்கையிலே கிடக்கின்றார்
எழுப்பச் சென்றமகனோ ஏங்கியோ நிற்கின்றான்
ஓடிவந்த மனையாள் ஓலமிட்டு அழுகின்றாள்
உறங்கும் சங்கர் எழும்பாமல் உறங்கியேவிட்டார்

மூன்றுநாள் முன்னே பேசியவர் சங்கர்
மூச்சுப் பேச்சின்று மூச்சடங்கிப் போனார்
சிரித்திட்ட சங்கர் சிரிப்படங்கிப் போனார்
சிறப்பாக வாழ்ந்தவர் சென்றுவிட்டார் எங்கோ

படித்தவர் பண்பாளர் படுக்கையிலே போனார்
பார்க்கும் இடமெல்லாம் சங்கரே தெரிகிறார்
ஆளுமையாம் சங்கர் அழவிட்டுப் போனார்
அவர்பேச்சை அவர்சிரிப்பை எப்போது கேட்பேன் ?

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button