கவிதைகள்

பதித்தவர் தடத்தில் நன்றியொடு பயணிக்கிறேன்!…. கவிதை….  பயணம்- 3 ….. சங்கர சுப்பிரமணியன்

என் அருமைத் தமிழே – உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!
என் அருமைத் தமிழே – உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!

உன்னைத் துதிக்கையிலே நெஞ்சில்
உன்மத்தம் உணர வைத்தாய்
என் அருமைத் தமிழே – உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!

பெருமைமிகு தமிழே – உயிரே
பேராண்மை பெற்றவளே
நிறையுறு வாழ்வியலே – என்றும்
நிலைபெறு பேரமுதே!

என் அருமைத் தமிழே – உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!

சங்கத் தமிழழகே – உயிரே
சாதனை படைத்தவளே
உந்தன் செழுமை கண்டு உன்னில்
என் உயிரும் இணைகிறதே

என் அருமைத் தமிழே – உயிரே
செந்தமிழ்ச் செம்மொழியே!

உன் பெருமை சொன்னால் – உள்ளம்
களியாட்டம் கொள்ளுதம்மா
மெச்சி உனை புழ்ந்தால் – மனமும்
மோகனம் கொள்ளுதம்மா

எண்ணத்தில் நீ உறைந்தால் – அதுவும்
இன்பமாய் இனிக்குதம்மா
வண்ண மலர்களைப்போல் – உயிரே
கண்ணைக் கவருதம்மா

உன்னைப் பழி சொன்னால் என்நெஞ்சில்
உதிரம் கொட்டுதம்மா
என் வாழ்வே நீயன்றோ? – உயிரே
என்னுயிர் தமிழன்றோ!
என்னுயிர் தமிழன்றோ!!
என்னுயிர் தமிழன்றோ!!!

சங்கர சுப்பிரமணியன்

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *