நிகழ்வுகள்

பெங்களூர் உலக யோகா சாம்பியன்ஷிப் 2026: 2 ம் இடம் பிடித்து இலங்கை அணி சாதனை!

இந்தியாவின் பெங்களூரில் 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.

இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்று அசத்தினர். இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

இந்த வெற்றியானது இலங்கையில் யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *