உலகம்

ஐவரி கோஸ்ட் ஜனாதிபதியை அவமதித்த மாலி பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை

சமீபத்தில் நான்காவது முறையாகப் பதவியேற்ற 84 வயதான ஐவோரியன்
ஜனாதிபதியை அவமதித்ததற்காக மாலி(Mali) பாராளுமன்ற உறுப்பினர்
ஒருவருக்கு ஐவரி கோஸ்ட்(Ivory Coast) நீதிமன்றம் மூன்று ஆண்டுகள்
சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மாலியின் இராணுவ ஆட்சிக் குழுவால் அமைக்கப்பட்ட இடைக்கால
பாராளுமன்றத்தில் பணியாற்றும் மமடூ ஹவா கஸ்ஸாமா(Mamadou Hawa
Gassama), கடந்த ஜூலை மாதம் ஐவரி கோஸ்டுக்கு பயணம் செய்த போது
கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதி அலசேன் ஔட்டாராவை(Alassane Ouattara) கொடுங்கோலர்,
மாலியின் எதிரி என்று வர்ணித்ததாகவும் நேர்காணல்களிலும் சமூக
ஊடகங்களிலும் அவரது தலைமையை கடுமையாக விமர்சித்ததாகவும்
வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, கஸ்ஸாமாவுக்கு அபராதம் மற்றும் அவர்
விடுதலையான பிறகு சமமான காலத்திற்கு ஐவரி கோஸ்டில் வசிக்க தடை
விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களில் தனது வெளிப்படையான கருத்துக்களுக்காக
அறியப்பட்ட கஸ்ஸாமா, மாலியின் 2020 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில்
பதவி நீக்கம் செய்யப்பட்ட இப்ராஹிம் பௌபக்கர் கெய்டாவின்(Ibrahim
Boubacar Keita) ஜனாதிபதி காலத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினராக பணியாற்றினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *