பலதும் பத்தும்

வைரலாகும் ‘அழும் குதிரை’ பொம்மைகள்; விரும்பி வாங்கும் இளைஞர்கள் ஏன் தெரியுமா?

சீனாவில் குதிரை ஆண்டை வரவேற்கும் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், ஒரு உற்பத்திப் பிழையால் உருவான ‘அழும் குதிரை’ பொம்மை சமூக ஊடகங்களில் வைரலாகி, விற்பனையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஜெஜியாங் மாகாணத்தின் யிவு நகரில் உள்ள யிவு சர்வதேச வர்த்தக நகரத்தில் இந்த பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

யிவுவைச் சேர்ந்த ‘ஹேப்பி சிஸ்டர்’ என்ற கடையில் தயாரிக்கப்பட்ட இந்த குதிரை பொம்மை, முதலில் சிரிக்கும் முகத்துடன் இருக்க வேண்டியதாக இருந்தது.

ஆனால் ஒரு தொழிலாளி புன்னகையை தலைகீழாக தைத்ததால், அது சோகமாக முகம் சுளிக்கும் தோற்றத்துடன் வெளியானது.

இந்தப் பிழையால் வாடிக்கையாளருக்கு பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டிய நிலை வரும் என கடை உரிமையாளர் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் அந்தப் பொம்மையின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியதும், அது குறுகிய காலத்திலேயே விற்றுத் தீர்ந்தது.

“பல வாடிக்கையாளர்கள் இதை மிகவும் அர்த்தமுள்ளதாகக் கருதுகிறார்கள்.

இது இன்றைய பெருநிறுவன அடிமைகளின் மனநிலையை பிரதிபலிக்கிறது என கூறுகின்றனர்.

அதிர்ஷ்டத்தை குறிக்கும் சிவப்பு நிறத்தில், கழுத்தில் தங்கக் காலர் மற்றும் மணியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் உடலில்,“பணம் விரைவில் வரும்” என்ற வாசகம் தங்க எழுத்துக்களில் எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன ராசி நாட்காட்டியில் 12 விலங்குகளில் ஒன்றான குதிரையின் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ள நிலையில், ஒரு சிறிய உற்பத்திப் பிழை எவ்வாறு இளம் தலைமுறையின் மனநிலையை பிரதிபலிக்கும் சமூகச் சின்னமாகவும், எதிர்பாராத வணிக வெற்றியாகவும் மாறியுள்ளது என்பதே ‘அழும் குதிரை’ பொம்மையின் கதை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button